நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

டெல்லி:

புதன்கிழமை விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த சம்பவத்தில், அந்த விமானத்தின் “பிளாக் பாக்ஸ்” (கருப்பு பெட்டி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த விபத்து தொடர்பான விசாரணை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் அஜித் பவாருடன் சேர்ந்து இரண்டு விமானிகள், ஒரு விமான பணிப்பெண், அவரது தனிப்பட்ட பாதுகாவலரும் உயிரிழந்தனர்.

விபத்து நடந்த சில மணி நேரங்களுக்குள் விமான விபத்து விசாரணை பணியகத்திலிருந்து மூன்று அதிகாரிகள் அடங்கிய குழுவும், சிவில் விமானப் போக்குவரத்து துறையிலிருந்து மேலும் மூன்று அதிகாரிகள் அடங்கிய மற்றொரு குழுவும் சம்பவ இடத்தை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset