செய்திகள் இந்தியா
பாஜக வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 கோடி வைப்பு தொகை: வட்டி மட்டும் 634 கோடி கிடைத்துள்ளது
புதுடெல்லி:
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பாஜக, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
அந்த கட்சியில் சுமார் 18 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியா மட்டுமன்றி, உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாஜகவுக்கு கிடைக்கும் நன்கொடை கணிசமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 2024- 25ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.6,769 கோடி நன்கொடை கிடைத்தது. தற்போதைய சூழலில் பாஜகவின் வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ.10,000 கோடி உள்ளது.
இதில் நிரந்தர வைப்பு தொகையாக ரூ.9,390 கோடி முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கடந்த 2024- 25ம் ஆண்டில் ரூ.634 கோடி வட்டி கிடைத்திருக்கிறது. கடந்த 2024- 25ம் ஆண்டுகளில் டெல்லி, ஒடிசாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களின் தேர்தல் பிரச்சாரத்துக்காக பாஜக ரூ.3,335.36 கோடியை செலவிட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தில் பாஜக அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
