நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு

பாட்டியாலா:

பஞ்சாப் மாநிலத்தில், சாண்ட்விச்பணம் செலுத்துவது தொடர்பான சிறிய தகராறில், காவல் துறையின் தலைமை கான்ஸ்டபிள் ஒருவரை ஆறு பேர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் பணியாற்றிய அமன்தீப் சிங், ஜனவரி 25 அன்று தனது சகோதரருடன் ஒரு கடையில் உணவருந்த சென்றபோது தாக்கப்பட்டார். அவர் அப்போது சீருடை அணியவில்லை. உணவுக்கான கட்டணம் குறித்து ஒரு இளைஞருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர் நண்பர்களை அழைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் வந்த ஆறு பேர் அமன்தீப்பை கத்தியால் தாக்கியதில், அவர் முதுகில் இரண்டு முறை குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விவகாரத்தில் அவரது சகோதரர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சிறார்களை உட்பட ஆறு சந்தேக நபர்கள் 36 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது. அவர்கள் ஆஷி, ஹிரா, ராகுல், கைஃப், ரிக்கி, மற்றொரு டீனேஜர் சிறார் என அடையாளம் காணப்பட்டனர்.

சம்பவத்துக்குப் பிறகு நாபா பகுதியிலிருந்து தப்பிச் சென்ற அவர்கள், பாட்டியாலா, லூதியானா மாவட்ட காவல் படையினரால் லூதியானாவில் கைது செய்யப்பட்டனர்.

- கிரித்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset