செய்திகள் இந்தியா
BREAKING NEWS: விமான விபத்தில் அஜித் பவார் பலி
மும்பை:
மகாரஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவர் உயிரிழந்ததாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், விமானத்தில் பயணித்த 2 விமானிகள், அஜித் பவாரின் பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட அனைவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து
மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான புணே மாவட்டம் பாராமதியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று காலை மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் அஜித் பவார் புறப்பட்டுள்ளார்.
பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் சென்ற விமானம் இன்று காலை 8.45 மணியளவில் தரையிறங்க முயற்சித்தபோது, நிலைத் தடுமாறி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
யார் இந்த அஜித் பவார்?
மகாராஷ்டிர துணை முதல்வரான அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார்.
கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக சரத் பவாரைவிட்டு தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்ற அஜித் பவார், நீதிமன்றத்தை நாடி தேசியவாத காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றினார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய தலைவராகவுள்ள அஜித் பவார், 2010 முதல் 2014 வரையிலும், 2019 முதல் தற்போது வரையிலும் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
மாநில அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல்வேறு பதவிகளை வகித்துள்ள அஜித் பவார், முதல்முறையாக பாராமதி மக்களவை உறுப்பினராக 1991 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 26, 2026, 9:49 pm
மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள்: இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம்
January 23, 2026, 12:47 am
பாஸ்மதி அரிசியை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவந்த வேளாண்மை விஞ்ஞானி பத்மஸ்ரீ சித்தீக் காலமானார்
January 21, 2026, 11:12 pm
பாஜக வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 கோடி வைப்பு தொகை: வட்டி மட்டும் 634 கோடி கிடைத்துள்ளது
January 16, 2026, 4:29 pm
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் கை விரல்களில் அழியும் மை: ராகுல் கடும் கண்டனம்
January 15, 2026, 11:13 pm
மும்பை மாநகராட்சி தேர்தல்: அழியா மைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் மார்க்கர் பேனா
January 12, 2026, 3:23 pm
மும்பை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து
January 10, 2026, 7:56 pm
