நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஸ்மதி அரிசியை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவந்த வேளாண்மை விஞ்ஞானி பத்மஸ்ரீ சித்தீக் காலமானார்

ஹைதராபாத்:

இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி பத்மஸ்ரீ சித்தீக் இன்று ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 89.

தமிழகத்தின் இளையாங்குடியைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சித்தீக் இந்தியாவின் வேளாண்மைக் கழகத்திற்கு தலைவராக இருந்தவர்.

பாஸ்மதி அரிசி தங்களுடையது என்று அமெரிக்கா உரிமை கொண்டாடி காப்புரிமை கோரியபோது அதற்காக அறிவியல் அறிஞர் சித்தீக் அது இந்தியாவின் மரபார்ந்த அரிசி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்து இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்தவர்.

இந்திய வேளாண்மைக் கழகத்திற்கு பல அரிய சேவைகளை செய்தவர்.

அவர் பணி ஓய்வு பெற்ற போது அவரது அரும்பணியைப் பார்த்து  அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேசத்தில் நீங்கள் ஆராய்ச்சிகளைத் தொடர வேண்டும் என்று அழைத்து ஹைதராபாத்தில் மிகப் பெரும் ஆய்வகத்தை அவருக்கு உருவாக்கித் தந்தார். சம்பளம் பெறாமல் ஆந்திர மாநிலத்திற்கு பல அரிய நெல் சாகுபடி முறைகளைக் கண்டறிந்து கொடுத்தார். அவர் சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டுக் கொண்டது உயர்தர ஆய்வுக்கூடம் மட்டுமே. எனக்கு ஓய்வூதியம் வருகிறது. அது போதும் என்று பெருந்தன்மையுடன் கூறியவர்.

அவரது மனைவி ஃபாத்திமுத்து சித்தீக் சிறந்த எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் பல எழுதி இருக்கிறார். நம்பிக்கை மாத இதழில் அவரது கதைகளும் பத்ம ஸ்ரீ சித்தீக் அவர்களின் நேர்காணலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset