செய்திகள் இந்தியா
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
டெல்லி,
டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு அணியில் பணியாற்றிய, நான்கு மாத கர்ப்பிணிப் பெண் கொமாண்டர் ஒருவர், தனது கணவரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜனவரி 22 அன்று நடந்த இந்த சம்பவத்தில், 27 வயதான காஜல் என்பவரின் தலையில் அவரது கணவர் டம்பல்களைக் கொண்டு தாக்கியதாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கொலை, கணவர் தரப்பின் வரதட்சணை கோரிக்கையால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்த இரவு, காஜலின் தம்பி நிகில், தனது மைத்துனரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறினார். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அங்கூர், “உன் அக்காவை இப்போது கொன்றுவிடுவேன், போலீசால் என்னை ஒன்றும் செய்ய முடியாது” என மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் மீண்டும் அழைத்தபோது காஜல் அலறிய குரல் கேட்டதாக கூறினார்.
அங்கூர் தொடர்ந்து, “அவள் இறந்துவிட்டாள், மருத்துவமனைக்கு வா” என கூறியதாக நிகில் தெரிவித்தார்.
டெல்லி போலீசார் கூறுகையில், இரவு 10 மணியளவில் ஏற்பட்ட சண்டையில் அங்கூர், காஜலின் தலையை கதவில் மோதச் செய்ததுடன், பின்னர் டம்பலைக் கொண்டு தாக்கியுள்ளார். தடயவியல் ஆய்வில், கதவு சட்டகத்திலும் அந்த டம்பலிலும் ரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த வழக்கில் அங்கூருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது அவர் காவல் துறையின் தற்காலிக காவலில் உள்ளார்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
BREAKING NEWS: விமான விபத்தில் அஜித் பவார் பலி
January 26, 2026, 9:49 pm
மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள்: இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம்
January 23, 2026, 12:47 am
பாஸ்மதி அரிசியை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவந்த வேளாண்மை விஞ்ஞானி பத்மஸ்ரீ சித்தீக் காலமானார்
January 21, 2026, 11:12 pm
பாஜக வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 கோடி வைப்பு தொகை: வட்டி மட்டும் 634 கோடி கிடைத்துள்ளது
January 16, 2026, 4:29 pm
