செய்திகள் இந்தியா
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
மும்பை:
விமான விபத்தில் காலமான அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் மராட்டிய மாநில துணை முதல்வரானார். மும்பை லோக் பவனில் சுநேத்ரா பவாருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மராட்டிய மாநிலத்தின் முதல் பெண் துணை முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவாரின் எதிர்பாராத மறைவைத் தொடர்ந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் மாநிலத்தின் புதிய துணை முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்த முக்கிய நிகழ்வில், ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதன் மூலம் மகாராஷ்டிர மாநில வரலாற்றிலேயே துணை முதலமைச்சர் பதவியை அலங்கரிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை சுனேத்ரா பவார் பெற்றுள்ளார்.
இந்தப் புதிய பொறுப்பை ஏற்பதற்கு முன்னதாக, சுனேத்ரா பவார் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். 2024 மக்களவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த போதிலும், பின்னர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுனேத்ரா, தற்போது மாநில அரசியலில் நேரடியாகக் களம் இறங்கியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தப் பதவியேற்பு விழா குறித்து தனக்கு எந்தத் தகவலும் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும், இது குறித்து எவ்வித ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
BREAKING NEWS: விமான விபத்தில் அஜித் பவார் பலி
January 26, 2026, 9:49 pm
மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள்: இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம்
January 23, 2026, 12:47 am
பாஸ்மதி அரிசியை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவந்த வேளாண்மை விஞ்ஞானி பத்மஸ்ரீ சித்தீக் காலமானார்
January 21, 2026, 11:12 pm
