நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மேற்கு கரையை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மசோதா

ஜெருசலேம்: 

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியை இஸ்ரேலுடன் இணைப்பதற்கான மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு இஸ்ரேலில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், இந்த மசோதா  தாக்கல் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு எதிரானது என்று ஜேடி வான்ஸ் கண்டித்துள்ளார்.

இந்த மசோதா முதல்கட்ட வாக்கெடுப்பில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியது.

இந்த மசோதா சட்டம் ஆவதற்குத் தேவையான அடுத்தடுத்த வாக்கெடுப்புகளில் தோல்வி அடையும் என்று கூறப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset