நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் Esso நிலையங்களை வாங்கும் இந்தோனேசிய நிறுவனம்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் செயல்படும் ExxonMobil நிறுவனத்தின் Esso பெட்ரோல் நிலையங்கள் கைமாறவிருக்கின்றன.

இந்தோனேசியாவின் Chandra Asri எனும் ரசாயன நிறுவனம் அவற்றை வாங்கவிருக்கிறது.

தன்னுடைய கிளை நிறுவனம்வழி அதற்கான ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாக Chandra Asri Pacific சொன்னது.

ஒப்பந்தத்தில் சுமார் 60 நிலையங்கள் உள்ளன.

அவை என்ன விலைகொடுத்து வாங்கப்படும் என்ற விவரத்தை Chandra Asri Pacific வெளியிடவில்லை.

ஒப்பந்தம் இவ்வாண்டு இறுதியில் நிறைவடையும் என்று நம்பப்படுகிறது.

அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் முதலில் வேண்டும்.

Esso பெயரில் எரிவாயு நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று Chandra Asri Pacific சொன்னது.

ஆதாரம் : Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset