நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் வங்கியை ஏமாற்றி கறுப்புப் பணப் புழக்கத்திற்கு உதவிய முன்னாள் வங்கி ஊழியருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் 28 வயது வாங் கிமிங் (Wang Qiming) ஆவார்.

வாங் சீனாவைச் சேர்ந்தவர். அவர் சிங்கப்பூர் Citibankகில் பணியாற்றினார்.

அவர் தமது வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து வங்கியை ஏமாற்றினார் என்று நிரூபணமாகியுள்ளது.

அதில் 3 பில்லியன் வெள்ளி கள்ளப் பணம் புரண்டதாகச் சொல்லப்பட்டது.

2020ஆம் ஆண்டு வாங் வாடிக்கையாளரின்
மின்னிலக்க நாணயத்தை மூன்றாம் தரப்பு முகவர் மூலம் விற்றுத் தரச் சம்மதித்தார்.

வங்கிக் கணக்கில் பணம் நியாயமான முறையில் வந்து சேர்வதைபோல் கணக்குக் காட்ட அவர் உதவினார்.

அதற்கு வாங் போலி ஆவணங்களை வங்கியிடம் சமர்ப்பித்தார்.

விசாரணையில் வாங்கின் குற்றங்கள் அம்பலமாயின.

அவர் கைத்தொலைபேசியில் இருந்த ஆதாரங்களை அழித்து விசாரணைக்கு இடையூறு விளைவித்தார்.

வாங் மீது 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. மேலும் 6 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.

வாங்கிற்கு ஈராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆதாரம்: மீடியா கோர்ப்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset