நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது

பாங்காக்:

தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடிக் கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

தாய்லாந்தில் ஆலயத்திற்காகச் சேகரிக்கப்பட்ட நன்கொடைப் பணத்தைத் திருட முயற்சி செய்த சந்தேகத்தில் இஸ்ரேலிய ஆடவர் மீது விசாரணை நடத்தப்படுகிறது.

பென் (Ben) என அழைக்கப்படும் அவருக்கு வயது 34.

பட்டாயாவின் (Pattaya) கேளிக்கை பகுதியில் அந்தச் சம்பவம் நடந்ததாக தாய்லந்து ஊடகங்கள் கூறின.

அவர் உடற்பிடிப்புக் கூடத்தில் சேவையைப் பெற்ற பிறகு தாம் செலுத்திய கட்டணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறார்.

அது சர்ச்சையானது.

உடல் பிடிப்பு நிலையம், ஆலயத்திற்காகத் திரட்டிய நன்கொடையை உறையில் இட்டு முன் கூடத்தில் வைத்திருந்தது.

சர்ச்சை வலுத்தபோது, பென் உறைகளில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு கடையிலிருந்து ஓட்டம் பிடித்தார்.

கடை ஊழியரும் அங்கிருந்த மோட்டார்சைக்கிள் டாக்சி ஓட்டுநர்களும் அவரை மடக்கிப் பிடித்தனர்.

காவல்துறை அதிகாரிகள் வரும்வரை அவர்கள் பென்னைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

காவல்துறை அவரை விசாரித்தபோது உறைகளில் பணம் இருந்தது தமக்குத் தெரியாது என்று பென் கூறியிருக்கிறார்.

பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது என்று உடல் பிடிப்பு நிலையம் சொன்னவுடன் யோசிக்காமல் அந்தச் செயலைச் செய்ததாக பென் சொன்னார்.

ஆனால் அவருடைய விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவர் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம்: பேங்காக் போஸ்ட்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset