நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் சளிக்காய்ச்சல் சம்பவங்கள்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் சளிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

வழக்கமாக டிசம்பரிலிருந்து மார்ச் மாதம் வரை அந்த எண்ணிக்கை கணிசமாக உயரும். இம்முறை அது முன்கூட்டியே அதிகரித்துள்ளது.

ஜப்பானிலும் மலேசியாவிலும்கூட அந்தப் போக்கு தென்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சளிக்காய்ச்சலுடன் மருத்துவரை நாடிச் செல்வோர் எண்ணிக்கை சுமார் 10 விழுக்காடு அதிகரித்துள்ளதாகச் சில மருந்தகங்கள் கூறுகின்றன.

தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset