செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி: பெண்கள் மூவரும் நிரபராதி எனத் தீர்ப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இஸ்தானாவை நோக்கிப் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி நடத்தியதாகக் கூறப்பட்ட பெண்கள் மூவரும் குற்றச்சாட்டிலிருந்து
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 26 வயது மொசமாத் சொபிக்குன் நஹார் (Mossammad Sobikun Nahar), 30 வயது சித்தி அமிரா மு,ஹம்மது அஸ்ரொரி (Siti Amirah Mohamed Asrori), 37 வயது அண்ணாமலை கோகிலா பார்வதி.
சிங்கப்பூர்ப் பெண்கள் மூவரும் ஆளுக்கு ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்கினர்.
இஸ்தானா நோக்கிச் செல்லும் பாதை பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் தடைசெய்யப்பட்ட வட்டாரம் என்பது அவர்களுக்குத் தெரியாது என்று மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
பெண்கள் மூவரும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையே இஸ்தானா அருகே பேரணி நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
மாவட்ட நீதிபதி ஜான் இங் (John Ng) குற்றச்சாட்டின் முதல் அம்சத்தை அரசாங்கத் தரப்பு நிரூபித்துவிட்டதாகச் சொன்னார். சொபிக்குன், அமிரா இருவரும் பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். அண்ணாமலை கோகிலா அந்த நாளில் உதவி புரிந்தார் என்பது குற்றச்சாட்டின் முதல் அம்சம்.
ஆனால் குற்றச்சாட்டின் இரண்டாவது அம்சத்தை அரசாங்கத் தரப்பு நிரூபிக்கவில்லை என்ற தற்காப்பு வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
அந்தப் பகுதி பேரணி நடத்தத் தடை செய்யப்பட்ட பகுதி என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்குமா என்பதே இரண்டாவது அம்சம்.
பெண்கள் மூவரும் சட்டத்தை மீறிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தனர் என்பது ஆதாரத்திலிருந்து புலப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் பேரணி நடத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் அதிகபட்சம் 6 மாதச் சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
