நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார் வழங்கி அசத்தல்

சண்டீகர்: 

ஹரியாணாவில் மருந்து தயாரிப்பு நிறுவனம் சொகுசு கார்களை ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கி அசத்தி உள்ளது.

தீபாவளி பண்டிகையின்போதும் தனது ஊழியர்களுக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்குவதை மிட்ஸ்கார்ட் மருந்து நிறுவனத்தின் தலைவர் பாட்டியா வழங்கமாக செயல்படுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு அவர் 15 பேருக்கு சொகுசு கார்களை வழங்கிய அவர் நிகழாண்டில் 51 பேருக்கு வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது நிறுவனத்தின் முதுகெலும்பாக உள்ள ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை வழங்கியும், மிகச் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியும் வருகிறேன்.

என் ஊழியர்கள் மிக கடினமாக உழைக்கின்றனர். அடுத்த ஆண்டு இன்னும் அதிக ஊழியர்கள் கார்களை பரிசாக பெறுவார்கள் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset