நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்த சேவை வாகனம் மீது மோதியது: இருவர் மரணம்

ஹாங்காங்:

ஹாங்காங் அனைத்துலக விமானநிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையைத் தாண்டிச் சென்றதில் இருவர் மாண்டனர்.

Boeing 747 ரக விமானம், சேவை வாகனம் ஒன்றில் மோதிய பிறகு கடலில் விழுந்ததாக அதிகாரிகள் கூறினர்.

விமானத்தில் இருந்த 4 ஊழியர்களும் காயமின்றித் தப்பித்தனர்.

விபத்து நடந்தபோது ஓடுபாதை பாதுகாப்பாய் இருந்தது.

சேவை வாகனமும் ஓடுபாதையிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் நின்றிருந்தது.

விபத்து நடந்த வடக்கு ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.

பாதுகாப்புச் சோதனைக்குப் பிறகு அது விரைவில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உதவி ஹெலிகாப்டர்களுடன் சுமார் 200 அதிகாரிகள் தேடல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset