நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் டிசம்பர் 27 முதல் சில ரயில் பயணங்களுக்குக் கட்டணம் இல்லை

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் தொடங்கும் பயணங்களுக்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரநாள்களில் காலை 7.30 மணிக்கு முன்னாலும் காலை 9 மணியிலிருந்து 9.45 மணி வரையிலும் கட்டணம் கிடையாது.

அந்த விவரத்தை சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று வெளியிட்டது.

அத்துடன் டிசம்பர் 27 முதல் வடகிழக்குப் பகுதியில் பயணிகளுக்குக் கட்டணக் கழிவுகளைக் கொடுக்கும் திட்டம் மேம்படுத்தப்படும்.

இந்தத் திட்டங்கள் உச்சநேரத்தில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆணையம் சொன்னது. 

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset