நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிரம்ப்புக்கு எதிராக "No Kings" பேரணி

வாஷிங்டன்:

அமெரிக்காவின் பல பகுதிகளில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) அதிகாரிப்போக்கை எதிர்த்து மக்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

"No Kings" என்று அழைக்கப்படும் அந்தப் பேரணி நியூயார்க், வாஷிங்டன், சிக்காகோ, மயாமி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் ஜனநாயகத்திற்கு மிரட்டல் விடுப்பதாகவும் பலர் குறைகூறுகின்றனர்.

டிரம்ப் அதிபராக வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி பல நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார்.

மத்திய அரசாங்கத்தின் சில துறைகளை மூடியது, குடிநுழைவுச் சட்டங்களைக் கடுமையாக்கியது, நகரங்களில் தேசியப் படையினரைப் பணியமர்த்தியது ஆகியவை அதில் அடங்கும்.

நெருக்கடியில் இருக்கும் அமெரிக்கா மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப தமது நடவடிக்கைகள் அவசியமானவை என்று டிரம்ப் தற்காத்து பேசியுள்ளார்.

ஆதாரம்: டைம்ஸ்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset