நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்

பேங்காக்:

தாய்லாந்தில் தமது மனைவி வீட்டுக்குள் தற்கொலை செய்துகொண்டது தெரியாமல் பார்வையற்ற கணவர் அவருக்காக வீட்டுக்கு வெளியே காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.

மாண்டவர் 53 வயது தாய்லந்துப் பெண். அவரது கணவர் ஜெர்மானிய ஆடவர்.

மனைவி இரண்டு மாடி வீட்டுக்குள் தூக்குப் போட்டு மாண்டது தெரியவந்தது. கார் விபத்தொன்றில் முழுமையாகப் பார்வை இழந்த பெண்ணின் கணவர் அவருக்காக வீட்டுக்கு வெளியே நீண்ட நேரம் அமர்ந்திருந்ததாக Bangkok Post கூறியது. 

தம்பதியினர் அந்த வீட்டில் கடந்த ஓராண்டாக வாடகைக்கு இருக்கின்றனர். மாண்ட பெண் பேங்காக்கில் (Bangkok) டெக்சி ஓட்டுநராக வேலை செய்துவந்தார். அவர் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் கணவரைப் பார்த்துக்கொள்வார். 

சாலை விபத்தொன்று தொடர்பில் தமது மனைவியிடம் 40,000 பாத் (சுமார் 1,600 வெள்ளி) இழப்பீடு கேட்கப்பட்டதாகவும் அவ்வளவு தொகை தங்களிடம் இல்லை என்றும் கணவர் கூறினார். இதனால் அண்மையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மனைவி மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கணவர் சொன்னார்.

ஆதாரம்: Bangkok Post

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset