நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை

புது டெல்லி: 

இந்தியாவில் 3 இருமல் மருந்துகள்  தரமற்றதாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு WHO எச்சரித்துள்ளது.

கோல்ட்ரிஃப், ரெஸ்பிஃபிரஷ் டிஆர், ரீலைஃப் என்ற அந்த மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தால் அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று WHO  கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிஃப் மருந்தை குடித்து சிறுநீரகச் செயலிழப்பால் 22 குழந்தைகள் உயிரிழந்தன.

இதையடுத்து, அந்த மருந்தை உருவாக்கிய தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நடத்திய விசாரணையில் கோல்ட்ரிஃப், ரெஸ்பிஃபிரஷ் டிஆர், ரீலைஃப் ஆகிய 3 இருமல் மருந்துகள் உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset