நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகளாவிய தலைமைத்துவ விருது விழா: தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது

பேங்காக்:

உலகளாவிய தலைமைத்துவ விருது விழா தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது.

தாய்லாந்து பேங்காக்கில் மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் முதன் முறையாக நடைபெற்ற மதிப்புமிக்க விருதுகளின் 13ஆவது பதிப்புடன், உலகளாவிய தலைமைத்துவ விருதுகள் 2025  விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவை தாய்லாந்து நாட்டு அரச இளவரசி உபோல்ரதன ராஜகன்யா சிறிவதனா பர்னாவதி தலைமை தாங்கினார்,

இது ஒவ்வொரு வணிகமும் ஒரு உலகளாவிய வணிகம் என்ற கருப்பொருளை எடுத்துக்காட்டுகிறது

இது சவால்களை எதிர்கொள்வதிலும் உலகளாவிய வணிக உலகை ஊக்குவிப்பதிலும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தை வலியுறுத்துகிறது.

மை ஈவென்ட்ஸ் இன்டர்நேஷனல், மேக்சிமேஜ் குழுமத்துடன் இணைந்து தெ லீடர்ஸ் இணைய ஊடகத்தின் மூலம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், 
மலேசியா, தாய்லாந்து, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, புரூணை, மியான்மார், தான்சானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க தலைவர்கள் ஒன்றிணைந்தனர்.

வணிகம், தொழில்நுட்பம், நிலைத்தன்மை, சுகாதாரம், கல்வி, சமூக கண்டுபிடிப்பு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதற்காக இந்த ஆண்டு மொத்தம் 25 விருது பிரிவுகள் வழங்கப்பட்டன.

முக்கிய விருது பெற்றவர்களில் தாய்லாந்தைச் சேர்ந்த டிசிசி குழுமத்தின் நிறுவனர் சரோயன் சிரிவதனபக்தி, ஆண்டின் சிறந்த பரோபகாரர் என்ற பட்டத்தைப் பெற்றார், டிஜாரா ஹோல்டிங்ஸ் லிமிடெட் (மலேசியா) நிறுவனர் டத்தோ டாக்டர் ஷம்சுதீன் யூனுஸ்,  ஹிமா இன்வெஸ்ட்மென்ட்ஸ் & கன்சல்டன்சி லிமிடெட் (யுனைடெட் கிங்டம்) தலைவர் சர் இக்பால் சக்ரானி ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றனர்.

தாய்லாந்து சுற்றுலா ஆணையத்தின்  வாரிய உறுப்பினரும் ஆளுநருமான தபானி கியாட்பைபூல் கலந்து கொண்டனர்.

இணைத் தலைவரும் அமைப்பாளருமான விவான் கர்னாசுட் தனது இறுதி உரையில், 

ஜிஎல்ஏ 2025 என்பது சாதனைகளைக் கொண்டாடுவதற்கான ஒரு நிகழ்வு மட்டுமல்ல, உலகளாவிய தலைமையின் விழிப்புணர்வின் சின்னமாகும்.

அனைத்து விருது பெறுபவர்களும் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள், எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த உலகத்தை வடிவமைக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset