நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்

கோலாலம்பூர்:

கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 2025 வரை ஆட்டிறைச்சி சந்தையின் தேவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

மஹா பெர்ஜாயா ஃபுரோசன் உணவு நிறுவனத்தின் நிர்வாகி மாஹ்ஃபுஸ் கவாரிஸ்மி இதனை கூறினார்.

தற்போதைய நிலவரப்படி உணவு சேவை,  சில்லறை விற்பனை  இரண்டிலும் அதிகமாக தேவைகள் உள்ளன.

இது வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வுகள், விரிவடையும் ஹலால் சந்தைகள், புரதம் நிறைந்த உணவுகளின் அடிப்படையில் இந்த தேவைகள் அதிகரித்துள்ளது.

உணவகங்கள், கேட்டரிங் சேவைகள், சில்லறை விநியோகஸ்தர்களிடமிருந்து ஆர்டர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக முதற்கட்ட தரவுகள் குறிப்பிடுகின்றன.

பல சப்ளையர்கள் 2025 ஆம் ஆண்டு இறுதி வரை தொடர்ச்சியான வளர்ச்சியைக் கணித்துள்ளனர்.

இந்த போக்கு வலுவான வாங்கும் திறனை காட்டுகிறது.

மேலும் ஆட்டிறைச்சி சார்ந்த தயாரிப்புகளை பரவலாக ஏற்றுக் கொள்வதை பிரதிபலிக்கிறது.

இதனால் இந்த அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய தொழில்துறை பங்குதாரர்கள் உற்பத்தியை அளவிடவும், விநியோகச் சங்கிலிகளை ஒழுங்குபடுத்தவும், இறக்குமதி, செயலாக்க திறன்களை வலுப்படுத்தவும் தயாராகி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset