நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது

சிங்கப்பூர்:

மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவையின் குத்தகை நீட்டிக்கப்பட மாட்டாது என்று அதைத் தொடங்கிவைத்த அடித்தள அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.

அந்தச் சேவை அடுத்த மாதம் 20ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

அண்மைய மறுஆய்வில் திரட்டப்பட்ட கருத்துகளையும் மற்ற அம்சங்களையும் ஆராய்ந்த பிறகு குத்தகை நீட்டிக்கப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டது.

வளங்கள் மற்ற வழிகளில் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இலவச இடைவழிப் பேருந்துச் சேவை 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமானது.

அப்போதிருந்த மரீன் பரேட் குழுத்தொகுதி, மெக்பர்சன், மவுண்ட்பேட்டன் (MacPherson, Mountbatten) தனித்தொகுதிகள் ஆகியவற்றின் குடியிருப்பாளர்களுக்கான ஓராண்டு முன்னோடித் திட்டமாக அது தொடங்கப்பட்டது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset