நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: 

சீனப் பொருள்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

சீனாவில் வெட்டி எடுக்கப்படும் அரியவகை கனிமங்கள் ஏற்றுமதிக்கு சீன அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்ததன் எதிரொலியாக இந்த மிரட்டலை டிரம்ப் விடுத்துள்ளார்.

இது டிரம்ப்பின் இரட்டை வேடத்தை காட்டுவதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனப் பொருள்களுக்கு அமெரிக்கா ஏற்கெனவே 30 சதவீத வரியை விதித்துள்ளது. இனி 130 சதவீத வரியாக சீனா மீது  உயரும்.

இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரியை டிரம்ப் விதித்துள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை 145 சவீதமாக அமெரிக்கா உயர்த்தியது. இதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருள்கள் மீதான வரியை சீனா 125 சதவீதமாக உயர்த்தியது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் சீனா 10 சதவீதமாகவும், அமெரிக்கா 30 சதவீதமாகவும் வரியைக் குறைத்தன. தற்போது, சீன பொருள்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset