நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஐரோப்பியப் பயணமா?: இனி அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்

லண்டன்:

ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவோர் இனி சில மாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.

நாளை முதல் பயணிகள் அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் அல்லாதோருக்குப் பொருந்தும்.

பயணிகளின் நிழற்படங்களும் விரல் ரேகைகளும் சேகரிக்கப்படும்.

12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு விரல் ரேகையை எடுக்க வேண்டியிருக்காது.

Entry/Exit System எனும் முறையின் கீழ் ஒவ்வொரு பயணிக்கும் ஒரு பதிவு உருவாக்கப்படும்.

மூவாண்டுக்கு ஒரு முறை மட்டுமே தகவல்களைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும்.

எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவும் அனுமதிக்கப்பட்ட நாட்களைவிட அதிகக் காலம் தங்குவோரை எளிதில் அடையாளம் காணவும் அது உதவும்.

புதிய நடைமுறையில் பங்கேற்கக் கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset