நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பயணப் பெட்டியில் ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்

செபராங் பிறை:

பயணப் பெட்டியில் ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது என்று வட செபராங் பிறை மாவட்ட போலிஸ் தலைவர்  அனுவார் அப்துல் ரஹ்மான் கூறினார்.

பெர்மாத்தாங் பாவ், அம்பாங் ஜாஜர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்து தனது துறைக்கு மதியம் 1.43 மணிக்கு அறிக்கை கிடைத்தது.

விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் முன்னேற்றங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குடியிருப்பு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வடிகால் சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவரால் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவர் போலிசாருக்கு தகவல் தெரிவித்தார் என்பது தெளிவாகிறது.

உடல் பிரேத பரிசோதனைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset