நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவும் சிங்கப்பூரும் நண்பர்களாக இருப்பதே நல்லது: தெங்கு ஸப்ரூல்

கோலாலம்பூர் :

மலேசியாவும் சிங்கப்பூரும்  நண்பர்களாக இருப்பதே நல்ல உறவாகும்.

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் ஸப்ரூல் அப்துல் அஸிஸ் இதனை  கூறினார்.

எஸ்பிஎச் மீடியாவின் 2025 ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசிய அவர்,

உலகம் முழுவதும் நிலவும் நிச்சயமற்ற சூழலில், இரு அண்டை நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

எதிரிகளாக இருந்து போட்டியிடுவதைவிட நண்பர்களாக இருப்பதே நல்லது.

இணைந்து செயல்பட்டால் நாம் அதிகம் சாதிக்க முடியும்.

இதை நாம் ஏற்கெனவே செய்துகாட்டியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளும் இணைந்து ஈட்டிய வெற்றிக்கு எடுத்துக்காட்டாக  ஜொகூர்- சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் விளங்குகிறது.
அதன் தொடர்பில் இவ்வாண்டுத் தொடக்கத்தில் இரு அரசாங்கங்களும் கையெழுத்திட்ட ஒப்பந்தம், மேம்பட்ட உற்பத்தி, தளவாடங்கள், மின்னிலக்கப் பொருளியல் போன்ற துறைகளில் எல்லை தாண்டிய வர்த்தகம், முதலீட்டை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset