நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7 ஹரிமாவ் மலாயா கால்பந்து வீரர்கள் விவகாரம் தொடர்பாக உரிமை கட்சி போலிசில் புகார்

கோலாலம்பூர்:

ஏழு ஹரிமாவ் மலாயா கால்பந்து வீரர்கள் விவகாரம் தொடர்பாக உரிமை கட்சியினர் போலிசில் புகார் செய்துள்ளனர்.

பிபா, மலேசிய கால்பந்து  சங்கம், சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு எதிராக தடைகளை விதித்ததைத் தொடர்ந்து,

7/கால்பந்து வீரர்களின் ஆவணங்களை போலியாக தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய பதிவுத் துறை,  இளைஞர் விளையாட்டு அமைச்சு, மலேசிய கால்பந்து சங்கம் ஆகியவற்றில் உள்ள பல தரப்பினர் போலி ஆவணங்களை உருவாக்க சதி செய்திருக்கலாம் என்று கூறி உரிமை செயலாளர் சதீஸ் முனியாண்டி டாங் வாங்கி மாவட்ட போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த ஏழு வீரர்களின் மலேசிய குடியுரிமையை நெறிமுறையற்ற வழிகளில் நீக்க சதி செய்த கட்சிகள் மலேசிய கால்பந்து சங்கம், தேசிய பதிவிலாகா இருப்பது தெளிவாகிறது.

இந்த நடவடிக்கையை தேசத்துரோகம். நாட்டை காட்டிக் கொடுக்கும் செயலாகக் கருதலாம்.

சாதாரண குடிமக்கள் அடையாள அட்டை பெறுவதற்கு தவறான தகவல்களை வழங்கியிருந்தால், அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset