நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துருக்கி இளவரசர் கணக்கில் 486 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனைகளைத் தடுக்க எம்ஏசிசி உத்தரவைப் பெற்றது

கோலாலம்பூர்:

துருக்கி இளவரசர் அப்துல்லா அப்துல் அஜீஸ் அல் - சவுத்தின் கணக்கில்  486 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனைகளைத் தடுக்க எம்ஏசிசி உத்தரவைப் பெற்றது.

அக்டோபர் 7 ஆம் தேதி எம்ஏசிசி தாக்கல் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து நேற்று விசாரணை நடந்தது.

இதில் பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி, சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானம் 2001 சட்டத்தின் பிரிவு 53 இன் கீழ் கோலாலம்பூர் குற்றவியல் உயர் நீதிமன்ற 1 நீதிபதி நூருல்ஹுடா நுரைனி முகமது நோர் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

1 எம்டிபி நிதியை தனது வங்கிக் கணக்கு மூலம் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் துருக்கி இளவரசர்  அப்துல்லா அப்துல் அஜீஸ் அல் -சவுத் வருமானத்தைப் பெற்று, மாற்றியமைத்து, பயன்படுத்தியதாக 2011ஆம் ஆண்டு பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டதாக எம்ஏசிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம், ஜேபி மோர்கனின் இரண்டு வங்கிக் கணக்குகளில் 87,148,732.89 டாலர், 2,777,759.74 டாலர், யூஎஸ்பி சுவிஸ் வங்கிக் கணக்கில் 15,394,169 டாலர் மதிப்புள்ள பரிவர்த்தனைகளை எம்ஏசிசி வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset