நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளியை முன்னிட்டு எஸ்டிஆர் உதவித் தொகை அக்டோபர் 18 முதல் வழங்கப்படும்: பிரதமர்

கோலாலம்பூர் -

தீபாவளி பெருநாளை முன்னிட்டு எஸ்டிஆர் உதவித் தொகை அக்டோபர் 18ஆம் தேதி முதல் வழங்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் கூறினார்.

இந்த ஆண்டு அரசாங்கம் எஸ்டிஆர் உதவி நிதி, சாரா எனும் அடிப்படை ரஹ்மா பங்களிப்பு ஆகியவற்றிற்காக 13 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியது.

இது கிட்டத்தட்ட 9 மில்லியன் பெறுநர்களுக்கு பயனளிக்கிறது.

எஸ்டிஆர் 3ஆம் கட்டம் வரை 6 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளன.

எஸ்டிஆர் உதவி நிதியின் 4 கட்ட பண செலுத்துதல் நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியர்களால் கொண்டாடப்படும் தீபாவளி முன்னிட்டு  2 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உதவித் தொகை அக்டோபர் 18 முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர் கணி


கேடும், செல்வப் பெருக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆனால், நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருப்பதே சான்றோருக்கு அழகாகும். 

இதன் பொருள் சிரமங்களும் எளிமையும் மாறி மாறி வருகின்றன

ஆனால் மனசாட்சியின் உறுதியே மனித கண்ணியத்தின் மிக உயர்ந்த அடையாளமாகும் என்று பிரதமர் மக்களவையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset