நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளி விடுமுறை நாட்களில் 2.1 மில்லியன் வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும்: போலிஸ்

கோலாலம்பூர்:

தீபாவளி விடுமுறை நாட்களில் 2.1 மில்லியன் வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து புலனாய்வு, மேலாண்மைத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முஹம்மத் யுஸ்ரி ஹசன் பாஸ்ரி இதனை கூறினார்.

தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 முதல் 21 வரை விடுமுறை காலமாக உள்ளது.

ஆக இக் கொண்டாட்டங்களுடன் இணைந்து, ஓப் லங்கார் வழியாக போக்குவரத்தை சீராக நடத்துவதில் போலிஸ் கவனம் செலுத்துகிறது.

இதற்காக சீரான போக்குவரத்து, சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 500 பணியாளர்கள், அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் முக்கிய நெடுஞ்சாலைகள், நகரச் சாலைகள், கூட்டரசு சாலைகளில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தும்.

இந்த நடவடிக்கை நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட  பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பண்டிகைக் காலத்தில் 2.1 மில்லியன் வாகனங்கள் சாலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset