
செய்திகள் மலேசியா
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் மக்களவையில் இன்று மாலை தாக்கல் செய்வார்
புத்ராஜெயா:
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
இது டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட நான்காவது பட்ஜெட்டாகும்.
மேலும் 13ஆவது மலேசியா திட்டத்தின் கீழ் முதல் பட்ஜெட்டாகும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான முதன்மை அடிப்படையாக செயல்படுகிறது.
2026 பட்ஜெட்டின் தாக்கல் உள்ளூர் தொலைக்காட்சி, சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இதில் பெர்னாமா தொலைக்காட்சியும் அடங்கும்.
இது 2026 பட்ஜெட் விளக்கக் காட்சிக்கு முந்தைய பகுப்பாய்வு சிறப்பு நிகழ்ச்சியையும் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பும்.
நிதியமைச்சகத்தின் பிரத்யேக பட்ஜெட் வலைத்தளத்தில் உள்ள 2025 பட்ஜெட்டுக்கு அறிக்கையின்படி,
முந்தைய மடானி பட்ஜெட்டுகளால் அமைக்கப்பட்ட வலுவான அடித்தளத்தில் நிறுவப்பட்ட உத்வேகத்தை 2026 பட்ஜெட் தொடரும்.
மடானி பொருளாதாரத்தின் மூன்று மையத் தூண்களான தேசிய வளர்ச்சியின் உச்சவரம்பை உயர்த்துதல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், நல்லாட்சி, பொது சேவை சீர்திருத்தத்தை முன்னெடுப்பது ஆகியவற்றை 2026 பட்ஜெட் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2025, 11:01 pm
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்திய சமுதாயத்திற்கு பிரதமர் வழங்கிய தீபாவளி பரிசாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 10, 2025, 10:31 pm
2026 பட்ஜெட் மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வரவேற்பு
October 10, 2025, 9:55 pm
மலேசியாவின் நிதிப் பயணத்தில் 2026 பட்ஜெட் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறிக்கிறது: டத்தோஸ்ரீ இக்பால்
October 10, 2025, 9:47 pm
மதுபானம், சிகரெட் விலைகள் உயரும்: பிரதமர் அன்வார்
October 10, 2025, 6:50 pm
இந்திய சமுதாயத்திற்கான 220 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் ஒதுக்கப்படுகிறது: பிரதமர்
October 10, 2025, 6:49 pm
பிடிபிடிஎன் வாயிலாக 5,800 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி: பிரதமர்
October 10, 2025, 6:48 pm
மதுபானம், சிகரெட் விலைகள் உயரும்: பிரதமர்
October 10, 2025, 6:23 pm