நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ அரசாங்கத்திற்கு தலைமையேற்காமல் அரசியல் நிலைத்தன்மை அடையாது: தெங்கு ரசாலி

கோலாலம்பூர்:

அம்னோ அரசாங்கத்திற்கு தலைமையேற்காமல் நாட்டின் அரசியல் நிலைத்தன்மை அடைய முடியாது.

மூத்த அரசியல் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா இதனை கூறினார்.

அம்னோ அரசாங்கத்தை வழிநடத்த மீண்டும் வரவில்லை என்றால் 2018 முதல் நிலவும் நிலையில்லா அரசியல் சூழ்நிலை தொடரும்.

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ 26 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே வென்றது.

கட்சியின் வரலாற்றில் மிக மோசமான முடிவு அதுவாகும்.

இருந்தாலும் தேசிய அரசியலில் கட்சி இன்னும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆக நாட்டின் முக்கிய கட்சியாக அதன் நிலையை மீட்டெடுக்க அம்னோ முதலில் சுயநலத் தலைவர்களை அகற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

கட்சி நலன்களைவிட தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியல்வாதிகள் நீக்கப்பட வேண்டும்.

ஏனெனில் அவர்களின் நடவடிக்கைகள் நாட்டின் எதிர்காலத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஒத்துப்போகவில்லை என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset