நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்நாட்டில் சுற்றுலா செல்பவர்களுக்கு சலுகை: தனிநபர் வருமான வரியில் மலேசியர்கள் RM1,000 வரை வரிச் சலுகையைப் பெறுவார்கள்: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்:

உள்நாட்டில் சுற்றுலா மையங்கள், கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான நுழைவுக் கட்டணங்களுக்கான தனிநபர் வருமான வரியில் மலேசியர்கள் RM1,000 வரை வரிச் சலுகையைப் பெறுவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தனது 2026 பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், 2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டாக இணைந்து மலேசியர்கள் நாட்டிற்குள் பயணம் செய்வதை ஊக்குவிப்பதற்காக இந்த வரிச் சலுகை வழங்கப்படுவதாகக் கூறினார்.

அடுத்த ஆண்டு மலேசியா 47 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், RM329 பில்லியன் சுற்றுலா வருமானத்தை ஈட்டவும் இலக்கு வைத்துள்ளதாக அன்வார் கூறினார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset