நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RMK-13 இன் வழி அனைத்து மாநிலங்களும் நன்மை அடையும்: பிரதமர் அன்வர்

கோலாலம்பூர்: 

RMK-13  திட்டத்தின் தயாரிப்பில் மாநில அரசின் கோரிக்கைகளையும் திட்டங்களையும் கூட்டரசு கவனத்தில் கொள்ளும் என மக்களவையில் பட்ஜெட் உரையின்போது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். 

மாநிலங்களின் அத்தியாவசியத் தேவைகளையும் மாநில வளர்ச்சிக்கான முன்னுரிமைகளையும் கண்டறிய ஒவ்வொரு மாநிலத்துக்கும்சென்று மாநில மந்திரிபெசர்களுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். 

உதாரணத்திற்கு, பினாங்கு மாநிலம் ஜூரு முதல் சுங்கை டூவா சுங்கச் சாவடி வரை PLUS போக்குவரத்தின் சீரமைப்பு திட்டம், மவுண்ட் எர்ஸ்கைன் சாலை முதல் பூர்மா சாலை வரை சுரங்கப் பாதை (underpass) அமைப்பு, பெர்தாம் விளையாட்டு வளாகத்தை மேம்படுத்தும் பணிகளைக் கோரியுள்ளது. 

ஜொகூர் மாநிலத்தில், செனை-தேசாரு  (பகுதி 2A) நெடுஞ்சாலையின் மேம்பாட்டுக்கும்  குளுவாங் முதல் லயாங்-லயாங் வரை புதிய சாலை அமைப்பது போன்ற திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. 

பேராக் மாநிலத்தில், கெரியனில் PLUS சந்திப்பு சாலையைக் கட்டுவதற்கும்  லுமுட் துறைமுகம் வரையிலான எப்.டி.100 பாதையை மேம்படுத்தும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன," என அவர் கூறினார்.

மேலும் "மற்ற மாநிலங்களில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களில் குறிப்பிடத்தக்கவை, கெடாவில் கராங்கான் நதிக்கரையிலான நீர்தேக்கத்திட்டம் , குவாலா கெடாவில் வாட்டர்பிரன்ட் கட்டுமானம், கெலாந்தான் பன்டார் பாரு துன்ஜோங் நகரத்தில் வீதிநீர் வடிகால் திட்டம்,  குவாலா திரெங்கானுவில் ருஸிலா கடற்கரை அரிப்பு தடுப்பு திட்டம், புதிய சாலை அமைப்பு திட்டம் ஆகியவை அடங்கும். 

குறிப்பிட்ட அனைத்து கோரிக்கைகளும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு, RMK-13 திட்டம் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான முறையில் நன்மைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்பதை பிரதமர் வலியுறுத்தினார்.

- கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset