நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மலேசியா வரவேற்கிறது: பிரதமர்

கோலாலம்பூர்:

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மலேசியா வரவேற்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

காசாவில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்திகளை மலேசியா வரவேற்கிறது. 

பல மாதங்களாகப் பதற்றமான பகுதியில் துன்பம், அழிவுகளுக்குப் பிறகு இது ஒரு நம்பிக்கை ஒளிக்கதிர் என்று அது வர்ணித்துள்ளது.

மேலும் சியோனிச ஆட்சியின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு இந்த முன்னேற்றம் ஓரளவு நிவாரணம் அளித்துள்ளது.

பல மாதங்களாக தாங்க முடியாத துன்பம், அழிவுக்குப் பிறகு இந்த வளர்ச்சி நம்பிக்கையின் புதிய ஒளியை அளிக்கிறது.

வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து அப்பாவி மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான ஒவ்வொரு முயற்சியும் நேர்மையுடனும் அவசரத்துடனும் செய்யப்பட வேண்டும்.

தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளில்  வெளியிட்ட ஒரு அறிக்கையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset