நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7 ஹரிமாவ் மலாயா வீரர்கள் மலாய் சரளமாகப் பேசக்கூடியவர்கள் என்பதை அமைச்சர் நிரூபிக்க வேண்டும்: ஃபட்லி

கோலாலம்பூர்:

ஏழு ஹரிமாவ் மலாயா வீரர்கள் மலாய் மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர்கள் என்பதை உள்துறை அமைச்சர் நிரூபிக்க வேண்டும். அவர் செய்வாரா?

பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபட்லி ஷாரி இக்கேள்வியை எழுப்பினார்.

மலேசிய ரத்த உறவை கொண்டுள்ளதாக கூறப்படும் 7 ஹரிமாவ் மலாயா ஆட்டக்காரர்கள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மடானி அரசாங்கத்தால் குடியுரிமை வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட ஏழு தேசிய வீரர்களின் மலாய் மொழி புலமை குறித்து கேள்வி எழுகிறது.

எனவே, அவர்களின் மலாய் மொழிப் புலமை குறித்த ஒரு சிறிய நேர்காணலை ஒளிபரப்புமாறு உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியோன் இஸ்மாயிலுக்கு அவர் சவால் விடுத்தார்.

மேலும் குடியுரிமை பெற விரும்பும் எந்தவொரு நபரும் மலாய் மொழியில் போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஏழு வீரர்களுடன் மலாய் மொழியில் ஒரு சுருக்கமான நேர்காணலைக் காட்டி, 

அடிப்படை வழியில் கூட மலாய் பேச முடியும் என்பதை நிரூபிக்க அமைச்சருக்குச் சவாலை ஏற்கத் துணிச்சல் இருக்கிறதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset