நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாட்டியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸை துரத்திய கார் சமிக்ஞை விளக்கை மீறியதால் விபத்தில் சிக்கியது

கூலிம்:

பாட்டியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸை துரத்திய கார் சமிக்ஞை விளக்கு எச்சரிக்கையை மீறியதால் விபத்தில் சிக்கியது.

கூலிம் மாவட்ட போலிஸ் தலைவர்,  சூல்கிஃப்லி அசிசான் இதனை கூறினார்.

தனது பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸை பெரோடுவா பெஸ்ஸா ஓட்டுநர் ஒருவர் துரத்திச் சென்றார்.

இதன் விளைவாக நேற்று கூலிம் ஹைடெக்கில் சமிஞ்சை விளக்கில் மோதி ஐந்து வாகனங்கள் விபத்துக்குள்ளானதற்குக் காரணமாக அமைந்தது.

நான்கு கார்கள் கொண்ட இந்த விபத்தில் 19 வயதுடைய இரண்டு கல்லூரி மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் அடங்கும்.

இந்த சம்பவம் மாலை 4.30 மணியளவில் நடந்தது.

தனியார் ஆம்புலன்ஸைப் பின்தொடர்ந்து வந்த பெரோடுவா பெஸ்ஸா கார் சிவப்பு சமிஞ்சை விளக்கை மீறி சென்றது.

இந்த சம்பவத்தால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஆண் மாணவரின் வலது கணுக்கால் உடைந்தது. அவரது பயணியின் கால், வலது கையில் காயம் ஏற்பட்டது.

பெரோடுவா பெஸ்ஸா ஓட்டுநர் மார்பு வலியால் அவதிப்பட்டார், கிராண்ட் லிவினாவை ஓட்டி வந்த பெண் ஓட்டுநரின் கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.

இருப்பினும், புரோட்டான் சாகா, டொயோட்டா கேம்ரியின் ஓட்டுநர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset