நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மானியம் இல்லாத ரோன் 95 பெட்ரோலின் விலை ஒரு மாதத்திற்கு 2.60 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்படும்: அமீர் ஹம்சா

புத்ராஜெயா:

மானியம் இல்லாத ரோன் 95 பெட்ரோலின் விலை ஒரு மாதத்திற்கு 2.60 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்படும்.

இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா இதனை கூறினார்.

மானியம் இல்லாமல் ரோன் 95 பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 2.60 ரிங்கிட் என அரசாங்கம் தொடக்க விலையாக நிர்ணயித்துள்ளது

இது வாடிக்கையாளர்களுக்கு சரிசெய்ய நேரம் கொடுக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு பராமரிக்கப்படும்.

அந்தக் காலத்திற்குப் பிறகு, மானியம் இல்லாத பெட்ரோலின் விலை முன்பு டீசல் விலைகளை அமல்படுத்தியதைப் போலவே, தானியங்கி விலை வழிமுறையின் படி வாரந்தோறும் நகரத் தொடங்கும்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, உலக சந்தை விலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் விலை மாறும்.

உலக எண்ணெய் விலைகள் உயர்ந்தால், அது உயரும்; அவை குறைந்தால், இங்கும் விலை குறையும்.

உலக கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதிலும், மானியம் இல்லாத ரோன் 95 விலை லிட்டருக்கு 2.60 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset