நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் சமயப் பணி பாராட்டுக்குரியது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் சமய பணியை பாராட்டுக்குரியது.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

ஒவ்வொரு நவராத்திரியை முன்னிட்டு கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் சார்பில் நவசக்தி நவ விழா செந்தூல் தண்டாயுதபாணி திருக்கோவில் மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும்.

அவ்வகையில் இவ்வாண்டு 52ஆவது ஆண்டை முன்னிட்டு நவசக்தி நவ விழா தற்போது கோலாகலமாக நடைபெறுகிறது என்று இயக்கத்தின் தலைவர் ஜி.சேகர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 7ஆம் நாள் நவசக்தி நவவிழா உபயத்தை நடராஜா தலைமையிலான கோலாலம்பூர் ஹில்டன் விடுதி முன்னாள் இந்து பணியாளர்கள் ஏற்று நடத்தினர்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் சிறப்பு வருகை தந்து விழாவில் கலந்து சிறப்பித்தார்.

டத்தோஸ்ரீ எம் சரவணன் உட்பட உபயக்காரருக்கு  கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் தலைவர் ஜி.சேகர் சிறப்பு செய்தார்.

ஒவ்வொரு ஆண்டும் நவசக்தி நவவிழாவை சிறப்பாக நடத்தி வரும் கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் சமய பணியை டத்தோஸ்ரீ எம். சரவணன் வெகுவாக பாராட்டினார்.

இதனிடையே இன்று  செப்டம்பர் 30 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும் அக்டோபர் 1 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் மற்றும் அக்டோபர் 2 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் வீதி ஊர்வலமும் நடைபெறுகிறது.

கோலாலம்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலாச்சார மையத்தின் இயக்குனர் ஸ்ரீமதி விஜயலெக்ஷ்மி சுந்தரராஜன்  நாளை அக்டோபர் 1 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் விழாவில் முக்கிய பிரமுகராக கலந்து கொள்கிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset