நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிரம்புடனான சந்திப்புக்கு அழுத்தம் கொடுங்கள்: பாஸ் கட்சிக்கு உரிமை கட்சி வலியுறுத்து

ஜார்ஜ்டவுன்:

அமெரிக்க அதிபர்  டிரம்புடனான சந்திப்புக்கு  பாஸ் கட்சியினர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

உரிமை கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல் இதனை வலியுறுத்தினார்.

அடுத்த மாதம் ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியா வருகிறார்.

இந்த வருகையின் போது அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய அரசாங்கத்தை பாஸ் வலியுறுத்த வேண்டும்.

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட கட்சியாக  பாஸ் விளங்குகிறது. 

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக மலேசிய மக்களின் உறுதியான நிலைப்பாட்டை வழங்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை மலேசியாவிற்கான டிரம்ப்பின் வருகை அமைகிறது.

ஆக இந்த வாய்ப்பை பாஸ் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

காசாவில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு டிரம்பை நேரடியாக சந்திப்பதை விட எதிர்ப்பு போராட்டங்கள் பயனளிக்காது.

ஆகவே அத்தகைய கூட்டத்தை ஏற்பாடு செய்ய பாஸ் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். 

இந்த விஷயத்தில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒற்றுமையாகப் பேச முடிந்தால், வாஷிங்டனுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் மலேசியாவின் செய்தி மிகவும் வலுவானதாக இருக்கும்.

இந்த சந்திப்பு நடந்தால், அது பாஸ்-ஐ மலேசியாவின் மிகப்பெரிய அரசியல் 
சக்தியாக உயர்த்துவது மட்டுமல்லாமல், 

உலக அரங்கில் மலேசியா ஒரு கொள்கை ரீதியான தார்மீகக் குரலாக நிற்க முடியும் என்பதையும் நிரூபிக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset