நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் கிட்டத்தட்ட 900,000 அந்நிய நாட்டினர் ரோன் 95 மானியத்திற்கு தகுதியற்றவர்கள்: அந்தோனி லோக்

புத்ராஜெயா:

மலேசியாவில் கிட்டத்தட்ட 900,000 அந்நிய நாட்டினர் ரோன் 95 பெட்ரோல் மானியத்திற்கு தகுதியற்றவர்கள்.

போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.

பூடி மடானி ரோன் திட்டம் இன்று முழுமையாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நாட்டில் மலேசிய ஓட்டுநர் உரிமங்களை  கிட்டத்தட்ட 900,000 அந்நிய நாட்டினர் வைத்துள்ளனர்.

இதனால் அவர்கள் இனி ரோன் 95 பெட்ரோல் மானியத்தை அனுபவிக்க முடியாது.

878,279 அந்நிய நாட்டினர் ஓட்டுநர் உரிமம்  வைத்துள்ளனர். அதே வேளையில் 18,710 பேர் நிரந்தர வதிவிட அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.

இவர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் 

ஆனால் குடிமக்கள் அல்ல. இந்தக் குழு எரிபொருள் மானியங்களுக்குத் தகுதியற்றவர்கள்.

இதன் பொருள், பல ஆண்டுகளாக, நமது அரசாங்கம் கிட்டத்தட்ட 900,000 வெளிநாட்டினருக்கு மானியங்களை வழங்கியுள்ளது.

அவர்கள் நிச்சயமாக மலேசியாவில் ஓட்டுநர் உரிமங்களைக் கொண்டு கார்களை வாங்கியுள்ளனர். 

அவர்களுக்கும் மானியங்கள் கிடைக்கின்றன.

இதனால்தான் பூடி95 மூலம் எங்கள் கொள்கை இலக்காகக் கொண்டது.  

மலேசிய குடிமக்களுக்கு மட்டுமே அரசு ரோன் 95 பெட்ரோலை வழங்கும் என்று அந்தோனி லோக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset