நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்துலக அரசியல் சூழலில் டிரம்பின் வருகையை பாருங்கள்: சைபுடின்

கோலாலம்பூர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மலேசிய வருகையை அனைத்துலக அரசியலின் சூழலில் பார்க்க வேண்டும்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியாவுக்கு வரவுள்ளார்.

அவரின் வருகையை தற்போதைய சர்ச்சைக்குரிய சூழலில் அல்ல, வட்டார  அரசியலின் சூழலில் பார்க்க வேண்டும்.

அனைத்துலக அரசியலின் சூழலில் டிரம்ப் ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

டிரம்ப் என்ற நபர் வந்ததால் தான் சர்ச்சை ஏற்பட்டது. டிரம்ப் இஸ்ரேலை ஆதரிப்பதில் யாருக்கும் உடன்பாடு இல்லை.

ஆனால் அனைத்துலக அரசியலின் சூழலில் அவரது வருகையை இப்போது  ஆசியானின் தலைவராக இருக்கும் பிரதமரும் அதை தெளிவுபடுத்தியுள்ளார்.

உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் பேசும்போது  அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset