நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்திய இளைஞர்கள் மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்வார்கள்: தினேஷ்

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய இளைஞர்கள் மாநாட்டில் 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தலைவர் தினேஷ் பேசில் இதனை  தெரிவித்தார்.

இளைஞர் விளையாட்டு துறை அமைச்சுடன் இணைந்து மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம்  இம்மாநாட்டை நடத்துகிறது.

இம்மாநாடு வரும் அக்டோபர் 12 ஆம் தேதி புத்ரா ஜெயா Dewan Seri De Endon  மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் நாடு தழுவிய அளவில் 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார், பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிசா தலைமை ஏற்கிறார்.

இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ, இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ நகுலேந்திரன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

மலேசிய இந்திய இளைஞர்கள் தங்களது ஆற்றல் திறனை வளர்க்க இந்த மாநாடு முக்கிய தளமாக விளங்கும் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset