நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

CyberDSA இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும்: கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

CyberDSA இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான  நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும்.

Digital Services, Defense and Security Asia (CyberDSA 2025) கண்காட்சி மாநாட்டை  தொடக்கி வைத்த இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனை தெரிவித்தார். 

இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில், 45 நாடுகளில் இருந்து வந்த 8,000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிபுணர்கள் மற்றும் 15 நாடுகளைச் சேர்ந்த 150 கண்காட்சி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 

ஆசியாவையும் அதற்கு அப்பாற்பட்ட பகுதிகள் எதிர்நோக்கும் சிக்கலான இணையப் பாதுகாப்பு சவால்களை வெல்லும் நோக்குடன் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தாக்குதல்கள், சப்ளை செயின் பாதிப்புகள், செயல்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கிய அடித்தள வசதிகளுக்கான அச்சுறுத்தல்கள் என்பது  தூரத்திலிருக்கும் அச்சுறுத்தல்கள் அல்ல. 

அவை தற்போது எதிர்கொள்ளும் சவால்கள். அவை தொடர்ந்து பரிணாம மாற்றத்திற்குட்படும் அபாயங்களாக கருதப்படுகின்றன. 

இவை தேசிய பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பாதிக்கக் கூடியவையாகும். 

ஆக, திடமாக இவற்றை எதிர்கொண்டு அதிலிருந்து மீள்வது,  பொருளாதார முன்னேற்றத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அடித்தளம் ஆகும். 

இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையானது வணிகங்கள் வளர்வதற்கும், அரசு நல்லாட்சி புரிவதற்கும், குடிமக்கள் பாதுகாப்பாக டிஜிட்டல் மாற்றத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகுக்கிறது என்று அவர் கூறினார்.

சைபர் பாதுகாப்பு, இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கை, திறன் மேம்பாடு, எல்லை தாண்டிய ஒத்துழைப்பு, சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது, வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றிற்கான தீர்வுகளை வழங்கும் ஒரு தளமாக CyberDSA செயல்படுகிறது.

CyberDSA 2025 கண்காட்சி மாநாடு, மலேசிய சைபர் செக்யூரிட்டி, மலேசிய ஆயுதப் படைகளின் சைபர் தற்காப்பு மின்காந்தப் பிரிவோடு இணைந்து நடத்தப்படுகிறது.

இது நாட்டின் இலக்கவியல், பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset