நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசா உதவிக் குழுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்கம் உதவுகிறது: பிரதமர் அன்வார்

சிப்பாங்:

ஜிஎஸ்எப் காசா தன்னார்வ உதவிக் குழுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு
அரசாங்கம் உதவுகிறது.

அவர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

காசாவிற்கு குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) மனிதாபிமான பணியில் 34 மலேசியர்கள் பங்கேற்றுள்ளனர்.

அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அவர்களுக்கு உதவி வழங்கும்.

மனிதாபிமான பணி முழுவதும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் உதவிக் குழுவிற்கும் அவர்களது ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுக்கும் உதவும்.

சுமுத் நுசாந்தராவின் புரவலராக, பாலஸ்தீன மக்களுக்கு உதவி வழங்குவதில் ஜிஎஸ்எப்-இல் பங்கேற்ற அனைத்து மலேசிய பிரதிநிதிகளும் காட்டிய போராட்ட மனப்பான்மைக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்ததாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset