நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜமாஅத்தாக தொழுகையில் கலந்து கொள்ளாத மாணவர்களின் பெயர்களை குறிப்பிடுவதால் சில மாணவர்களுக்கு ஷாரா கைரினாவை பிடிக்காது

கோத்தா கினபாலு:

ஜமாஅத்தாக தொழுகையில் கலந்து கொள்ளாத மாணவர்களின் பெயர்களை குறிப்பிடுவதால் சில மாணவர்களுக்கு ஷாரா கைரினாவை பிடிக்காது.

இறந்தவரின் தாயாரை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ரிஸ்வாண்டியன் எம். போர்ஹான் இதனை தெரிவித்தார்.

பள்ளி சூராவில் ஜமாஅத்தாக தொழுகை செய்யாதவர்களின் பெயர்களை ஷாரா பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சில மாணவர்கள் மறைந்த ஜாரா கைரினாவை விரும்பவில்லை என்று ஒரு சாட்சி மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஏழாவது சாட்சியான அவர் ஷாராவை ஒரு மகிழ்ச்சியான மாணவராக அறிந்திருந்தார்.

அவர் மற்ற மாணவர்களை அன்பாகப் பேசவும் கண்டிக்கவும் விரும்பினார் என்று கூறினார்.

சில சமயங்களில் அவர்கள் சந்திக்கும் போது ஷாரா கைரினாவுடன் பேசி வாழ்த்துவார்கள்.

இறந்தவர் பதார் (பதான் தக்வா டான் ரோஹானி) உறுப்பினராக ஆசைப்படுவதை சாட்சி அறிந்திருந்தார்.

இருப்பினும் ஷாரா கைரினாவை விரும்பாத மாணவர்களும் இருப்பதாக சாட்சி கூறினார். 

ஷாரா கைரினாவின் மரணம் குறித்த விசாரணை நடவடிக்கைகள் இன்று நிறைவடைந்த பின்னர் வழக்கறிஞர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset