
செய்திகள் மலேசியா
தீபாவளி கொண்டாட்டத்திற்காக கூடுதல் ஒரு நாள் பொது விடுமுறை வழங்க வேண்டும்: இந்து சங்கம்
கோலாலம்பூர்:
தீபாவளி கொண்டாட்டத்திற்காக கூடுதல் ஒரு நாள் பொது விடுமுறையை மடானி அரசு வழங்க வேண்டும்.
மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் தங்க கணேசன் இதனை கூறினார்.
மலேசியா பல்வேறு இன, மத மக்கள் இணைந்து வாழும் அழகிய நாடு.
இங்கே வாழும் இந்து சமூகம், தலைமுறை தோறும் கடைப்பிடித்து வரும் பாரம்பரியத்தில் தீபாவளி ஒரு முக்கியமான திருநாளாகக் கருதப்படுகிறது.
ஒளி இருளை வெல்லும் அடையாளமாகக் கொண்டாடப்படும் இந்த புனித நாள், ஆன்மிகத்தையும் குடும்ப பந்தங்களையும் வலுப்படுத்தும் சிறப்பு வாய்ந்த விழாவாகும்.
தற்போது மடானி அரசாங்கம் வழங்கும் ஒரு நாள் பொது விடுமுறை, நாட்டின் பெரும்பாலான இந்து குடும்பங்களுக்கு போதுமானதாக இல்லை.
தீபாவளியின் போது எண்ணெய் குளியல், வீட்டுத் தூய்மை, தீபம் ஏற்றுதல் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்காக பெரும் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது.
அதற்கு பிறகு தீபாவளி நாளில் கோயில் வழிபாடு, உறவினர் சந்திப்பு, சமூக கொண்டாட்டம் ஆகியவை நடைபெறுகின்றன.
பலர் தொலைதூர மாநிலங்களில் வசிக்கும் குடும்பத்தினருடன் சந்திக்கவும், நீண்ட பயணம் மேற்கொள்ளவும் வேண்டியதால், ஒரு நாள் மட்டும் போதாது என்பதே மலேசிய இந்து சங்கத்தின் கருத்தாகும்.
மேலும், மலேசியாவின் பிற முக்கிய பண்டிகைகளில் பல தினங்கள் பொது விடுமுறை வழங்கப்படும் நடைமுறையை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடும் மலேசிய இந்து சங்கம், மத நல்லிணக்கம், கலாச்சார அங்கீகாரம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் இந்த கோரிக்கை நியாயமானது என்று வலியுறுத்துகிறது.
இதனால், தீபாவளிக்கு கூடுதல் ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டாள், குடும்ப ஒன்று சேர்க்கை, மத வழிபாடு, சமூக சேவை போன்ற நிகழ்ச்சிகளை அமைதியாகவும் மகிழ்ச்சியுடனும் மேற்கொள்ள மலேசிய இந்து சமூகத்திற்கு பெரும் ஆதரவாக இருக்கும்.
மலேசிய மடானி அரசாங்கம் இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தங்க கணேசன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2025, 10:43 pm
காசா உதவிக் குழுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்கம் உதவுகிறது: பிரதமர் அன்வார்
September 30, 2025, 6:55 pm
டிரம்புடனான சந்திப்புக்கு அழுத்தம் கொடுங்கள்: பாஸ் கட்சிக்கு உரிமை கட்சி வலியுறுத்து
September 30, 2025, 6:54 pm
அனைத்துலக அரசியல் சூழலில் டிரம்பின் வருகையை பாருங்கள்: சைபுடின்
September 30, 2025, 6:52 pm
மலேசியாவில் கிட்டத்தட்ட 900,000 அந்நிய நாட்டினர் ரோன் 95 மானியத்திற்கு தகுதியற்றவர்கள்: அந்தோனி லோக்
September 30, 2025, 6:51 pm
மானியம் இல்லாத ரோன் 95 பெட்ரோலின் விலை ஒரு மாதத்திற்கு 2.60 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்படும்: அமீர் ஹம்சா
September 30, 2025, 4:58 pm
CyberDSA இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும்: கோபிந்த் சிங்
September 30, 2025, 4:55 pm
மலேசிய இந்திய இளைஞர்கள் மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்வார்கள்: தினேஷ்
September 30, 2025, 4:37 pm