நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா

கோலாலம்பூர்:

மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்.

அதன் தலைவர் டத்தோ இப்ராஹிம் ஷா இதனை கூறினார்.

புதிய தலைமைத்துவத்தின் கீழ் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம்  சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

இதனால் தற்போது மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 16,0000த்தை எட்டியுள்ளது.

அதேவேளையில் கூட்டுறவு நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில் கூட்டுறவு நிறுவனத்திற்கு கிடைத்த லாபம், அதன் மூலம் உறுப்பினர்களுக்கு லாப ஈவு வழங்குவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம்  ரூட்டர்ஸ் பயண நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக உறுப்பினர்கள் தங்களின் வெளியூர் உள்ளூர் பயணங்களுக்கு ரூட்டர்ஸ் பயண நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

உறுப்பினர்களுக்கு குறைவான தரமான பயண ஏற்பாடுகளை செய்து தர ரூட்டர்ஸ் பயண நிறுவனம் தயாராக உள்ளது என்று டத்தோ இப்ராஹிம் ஷா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset