செய்திகள் வணிகம்
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் பாருவுக்கு டாக்சிகளில் செல்வதற்குப் புதிய சேவை அறிமுகமாகவிருக்கிறது.
ComfortDelGro நிறுவனம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதியிலிருந்து அந்தச் சேவையை வழங்குகிறது.
சிங்கப்பூரின் எந்தப் பகுதியிலிருந்தாலும் வீட்டிற்கே சென்று பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவர்.
சிங்கப்பூரிலிருந்து Johor Bahru - Larkin பேருந்து முனையத்துக்குச் செல்லக் கட்டணம் 80 வெள்ளி.
Ban San Street டாக்சி நிறுத்தத்திலிருந்து ஜொகூர் பாரு செல்லக் கட்டணம் 60 வெள்ளி. சாங்கி விமான நிலையத்திலிருந்து அதற்கான கட்டணம் 120 வெள்ளி.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பதிவு செய்யப்பட்ட டாக்சிகள் மட்டும் சேவைக்கு அனுமதிக்கப்படும்.
சிங்கப்பூர் டாக்சிகள் பயணிகளை Larkin Sentralஇல் மட்டும் இறக்கிவிடலாம். மலேசிய டாக்சிகள் சிங்கப்பூரின் ஜாலான் பெசார் (Jalan Besar) அருகே உள்ள Ban San Street இல் நிறுத்தப்படவேண்டும்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 11:49 am
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: பலம் பெறும் மலேசிய ரிங்கிட்
April 15, 2026, 11:10 am
தாய்லாந்தின் சொங்க்ரான் திருவிழா: 3000 கோடி பாட் வருமானம் ஈட்டி மெகா சாதனை
April 13, 2026, 4:47 pm
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
April 9, 2026, 5:23 pm
மெய்நிகர் சொத்துக்களைப் பயன்படுத்தி பணமோசடி செய்யும் அபாயம் அதிகரிக்கிறது
April 9, 2026, 10:35 am
உலக எரிசக்தி நெருக்கடி: டிக்டாக் ஷாப் பாதிக்கப்படுமா?
April 7, 2026, 11:32 am
