நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்.

மஇகா துணைத் தலைவரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார். 

மஸ்ஜிட் இந்தியாவில் அமைந்திருக்கும் கேவிடி  தங்கம்,  வைர மாளிகையின் 4ஆவது கிளை திறப்பு விழாவைத் தலைமையேற்று திறந்து வைத்ததில் மகிழ்ச்சி. 
 
மேலும் தங்கத்தின் விலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கூடிக்கொண்டே போகிறது.

எனவே தங்கம் வாங்குவது ஒரு சிறந்த சேமிப்பாகவும் இருந்து வருகிறது. ஆபத்து அவசர வேளைகளில் நமக்குக் கை கொடுப்பதும் தங்கம் தான். 

எனவே தங்கம் வாங்குவதால் நமக்கு நன்மையே.

மேலும் வெற்றியை தற்காத்துக் கொள்ள தொடர்ந்து உழைக்க வேண்டும்.

அவ்வகையில் கடுமையாக உழைதது வெற்றி பெற்ற தங்கத்துரைக்கு எனது பாராட்டுகள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

முன்னதாக கேவிடி தங்க மாளிகை குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் தங்கத்துரை  தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா, மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக கேவிடி தங்க மாளிகையை திறந்து வைத்தனர்.

மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹவகர் அலி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். 

கேவிடி  தங்க மாளிகையின் நான்காம் ஆண்டை இன்று திறப்பு விழா கண்டிருக்கிறது.

ஆக மக்கள்  916 நகைகள் உட்பட அனைத்து வகையான  தங்க ஆபரணங்களை இங்கு நேரடியாக வந்து வாங்கிச் செல்லலாம் என்று தங்கத்துரை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset